தமிழகத்தில் வேகமாக பரவும் 2 ஆம், 3 ஆம் மற்றும் 4 ஆம் அலை கொரோனா வைரஸ்! தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்!!
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் 3 மாதம் ஊரடங்கு காரணமாக கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது கொரொனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
சென்ற வாரம் வரையில் 100 ல் ஒருவர் என்ற விகிதத்தில் பரவிய கொரொனா இந்த வார ஆய்வின் படி 100 ல் இருவர் என்ற விகிதத்தில் வேகமாக பரவுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்களின் அலட்சியமும் கொரொனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாததே காரணம் என்றும் தெரிவித்தார். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நோய் பரவுதல் குறைந்ததால் தீபாவளி, பொங்கல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதனால் மக்களும் நோய் பரவுவது குறைந்து விட்டதாக நினைத்து நோயின் மீதுள்ள பயம் குறைந்து சகஜமான வாழ்விற்கு திரும்பி விட்டனர். உலகம் முழுவதும் அதித்தீவிரமாக பரவும் 2 ஆம், 3 ஆம், மற்றும் 4 ஆம் அலை கொரோன வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மக்கள் அனைவரும் தடுப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிவதையும் தனிமனித இடைவெளியையும் மிகவும் அவசியமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவி கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் தெரிவித்தார். இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வலியுறுத்தப்பருகின்றனர்.