வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி: மக்களிடையே பெரும் வரவேற்பு!

0
194
#image_title

வந்தே பாரத் ரயில் 2வது சோதனை ஓட்டமும் வெற்றி; திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு செல்ல 7 மணி நேரம் 50 நிமிடங்களில் வந்தடைந்தது, மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.

வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் இரண்டாவது சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு சென்றடைய 7 மணி 50 நிமிடங்கள் ஆனது. தம்பனூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்ட ரயில், மதியம் 1.10 மணிக்கு காசர்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

முதன் முதலாக காசர்கோடு ஸ்டேஷனுக்கு வந்த வந்தேபாரத் ரயிலை காண முஸ்லிம் லீக் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் வந்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் முரளீதரன் ஆகியோர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர்.

கேரளாவில் வந்தே பாரத் கொடியை பிரதமரே தொடங்கி வைப்பார் என்றும் அவர் கூறினார். வரும் 25ம் தேதி வந்தே பாரத் பிரதமர் மோடி கொடியசைத்து முதல் பயணத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.

வந்தேபாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20 மணியளவில் கண்ணூர் ரயில் நிலையத்தை அடைந்தது குறிப்பிடதக்கது.