இது என்ன கேப்டன் மகனுக்கு வந்த சோதனை?? ரீலீஸ் தேதியை தள்ளி வைத்த 3 படங்கள்!! காரணம் என்ன??

0
152
3 films whose release dates have been postponed
பொங்கலுக்கு வருவதாக இருந்த 10 படங்கள் சில காரணத்தால் ரீலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்.புத்தாண்டு தினத்தன்று நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, 2025 பெரும் ஏமாற்றத்துடன் தொடங்கியிருக்கிறது எனலாம்.அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்படுகிறது என லைகா நிறுவனம் அறிவித்தது. எப்போது ரிலீஸ் என்பதும் அறிவிக்கப்படாததும்  ரசிகர்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸ் இல்லை என அறிவித்த உடன் பல்வேறு படங்கள் பொங்கல் ரேஸிற்கு வருவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், தற்போது வரை பொங்கல் ரேஸில் இருக்கும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
*வணங்கான்: இயக்குநர் பாலாஇயக்கி  மற்றும் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
*கேம் சேஞ்சர்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பான் – இந்தியா படம்.தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு RRR படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் வெளியாவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
*2கே லவ் ஸ்டோரி -இப்படத்தில் புதுமுக நடிகர் ஜகவீர் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார்
*காதலிக்க நேரமில்லை: வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களுக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
*மெட்ராஸ்காரன்: மலையாள நடிகர் ஷான் நிகாம் தமிழில் அறிமுகமாகி உள்ளது இந்த திரைப்படம்.இந்த படத்தில் கலையரசன், கருணாஸ், பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.
*10 ஹவர்ஸ்:நடிகர் சிபிராஜ் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்த படம் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. சின்ன பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் க்ரைம் த்ரில்லராக திரைக்கு வருகிறது.
*சுமோ – மிர்ச்சி சிவா படம்
*தருணம் – கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ள படம்
*படை தலைவன் – விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்
அதேநேரம், ஜனவரி 10 வெளியீட்டை அறிவித்த சிபி சத்யராஜின் “10 ஹவர்ஸ்”, சண்முக பாண்டியனின் “படை தலைவன், இயக்குநர் சுசீந்திரனின் “2கே லவ்” ஸ்டோரி ஆகிய படங்களுக்கு தற்போது போதிய திரைகள் கிடைக்காததால் தங்களின் வெளியீட்டை ஒத்திவைக்க உள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.