கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

0
119

நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற 3 மாவட்டங்களில் நோய்த்தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சென்ற சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது .அதிலும் குறிப்பாக சென்னையில் படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக திருப்பூர், மதுரை, சேலம், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் படிப்படியாக இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாவட்டங்களில் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால், பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக கோயம்புத்தூர், மதுரை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த கூட்டத்தின் முடிவில் ஒரு தீர்வு காணப்பட்டது. அதாவது நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், போன்ற மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தவும், மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஒன்றிணைந்து நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் 3 அதிகாரிகளை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சித்திக் ஆணையர் வணிகவரித்துறை அவர்களும், திருப்பூர் மாவட்டத்திற்கு ஸ்ரீ சத்தியமூர்த்தி வேளாண்மை துறை செயலாளர், ஈரோடு மாவட்டத்திற்கு டாக்டர் செல்வராஜ் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் ஆகிய மூன்று அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.