Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!!

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!!

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணிகளிடம் இருந்து விமான நிலையத்தில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் சொய்துள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் துபாய் ஷார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரை வழிமறித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பயணி கொண்டு வந்த பாஸ்தா தயாரிக்கும் இயந்திரம், மிக்சி கிரைணடர் இரண்டையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர் கொண்டு வந்த இயந்திரங்களில் சோதனை நடத்தியதில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இயந்திரங்களில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தின் எடை 1.386 கிலோ என்று தெரிவித்தனர்.

இதே போல ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த மற்றொரு பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நபர் பெல்ட் போன்ற வடிவமைக்கப்பட்ட ஆடையில் தங்கத்தை மறைத்து கடத்தி கொண்டுவரப்பட்டதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த பயணியிடம் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் சுமார் 1.79 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். ஆக மொத்தம் நேற்று(ஆகஸ்ட்31) ஒரு நாளில் மும்பை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 3 கிலோ எடை கொண்ட தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது

 

Exit mobile version