சோஷியல் மீடியாவில் இவ்வாறு புகைப்படம் போட்டால் 3 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

0
215
3 lakh fine and imprisonment if this photo is posted on social media!! The action order put by the police!!

 

Chennai: ஒரு நபரின் புகைப்படைத்தை சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் 3 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் இல்லாத நபர்களே இருக்க முடியாது. ஃபேஸ்புக், ட்விட்டர், திரட் என்று பல செயலிகள் வரிசையாக வந்துவிட்டது. இதன் மூலம் பலரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடமாக இதனை பயன்படுத்திக் கொண்டாலும் ஒரு சிலருக்கு இது பாதகமாகவே உள்ளது.

அந்த வகையில் பெரும்பாலானோர் தவறான நோக்கத்தில் மறைமுகமாக பெண்களை  புகைப்படம் எடுத்து வருகின்றனர். அதனை மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.இதனால் பாதிப்படைந்த பெண்கள் பலரும் சைபர் கிரைம் உள்ளிட்ட காவல்துறையிடம் புகார் அளித்தும் இதை தடுக்கும் வகையில் தீவீர நடவடிக்கை ஏதும் எடுக்கபப்டவில்லை. இதற்கு முடிவு கட்டும் விதமாக சென்னை காவல் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இனிவரும் நாட்களில் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி ஏதாவது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர். இது குறித்து புகாரளிக்க நினைக்கும் நபர்கள் சைபர் கிரைம் என்னான 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.