மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!!
சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்ப்பவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாடுகள் வளர்ப்பவர்கள் அவர்களின் இடத்தில் கட்டி வைக்காமல் பொது வெளியில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில நேரங்களில் மாடுகள், மனிதர்களை தாக்கும் சம்பவமும் அரங்கேறுகிறது. இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான முழு பொறுப்பும் அம் மாடுகளை வளர்ப்பவர்களுக்கு தான் என மாநகராட்சி கூறியுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும், மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் கண்காணிப்பில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் பத்து நபர்களை நியமித்துள்ளனர்.
இவர்கள் காவல் துறை உதவியோடு சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள மாடுகளைப் பிடித்து வருகின்றனர். இந்த செயல்முறையானது 14 ஆம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டது. தற்பொழுது வரை 229 மாடுகளை பிடித்துள்ளனர். அவ்வாறு சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக மாடுகளை திரிய விட்டால் அவர்களின் உரிமையாளர்களுக்கு பிராணிகள் வகை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில் தற்பொழுது வரை பிடிப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1550 வீதம் 3,54,950 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாடுகளை வளர்ப்பவர்கள் சொந்த இடங்களிலேயே வைத்து பேணி காக்க வேண்டும். இவ்வாறு பொது இடங்களில் திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகாரட்சி எச்சரித்துள்ளது.