BC MBC ஆக இருந்தால் 3 லட்சம் மானியம்!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

0
1625
3 lakh subsidy if BC is MBC!! Tamil Nadu Government Mass Notification!!

 

 

TN Gov: பிசி எம்பிசி யில் பொருளாதார சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 3 லட்சம் மானியம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்குண்டான அறிவிப்பு குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசானது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்மணிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவது போல, மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஆயிரம் வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி இல்லத்தரசிகளை பொருளாதார ரீதியாக உயர்த்தவும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ஆயிரம் வழங்கி வருகிறது.

மேற்கொண்டு கைம்பெண்கள் கணவரால் கைவிடப்பட்டவர்கள் போன்றோரை முன்னோக்கி கொண்டு வர சிறு தொழில் தொடங்க ரூ 50,000 ரூபாயை 200 நபர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இவர்களை அடுத்து பிசி எம்பிசி உள்ளிட்டோரில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3 லட்சம் மானியம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த மானியமானது அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் நவீன சலவையகம் அமைக்க உதவும் எனக் கூறியுள்ளனர்.

அதன்படி அத்தொழில் தொடங்க தேவையான இயந்திரங்கள் பொருட்கள் வாங்குவதற்கு இப்பணம் உதவிகரமானதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இந்த மானியத்தை பெற 10 பேர் கொண்ட குழு மற்றும் அவர்களின் வருட வருமானமானது ஒரு லட்சத்திற்கும் கீழாக இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளனர்.

இவர்கள் தங்களின் தரவுகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளனர். இவ்வாறு விண்ணப்பிப்பவர்களின் தரவுகளை ஆய்வு செய்து மானியம்வாங்குவவதற்கு தகுதியானவர்களா என்று தேர்ந்தெடுக்கப்படுவர்.