Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி தாக்கி மூவர் பலி.. காவல்துறையினர் விசாரணை..!

விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளில் உள்ளிட்ட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அவரது வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். இதற்கிடையில், கான்கிரீட் வேலையின் போது போடப்பட்ட சவுக்கு குச்சிகள் பலகைகளை பிரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது, கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிலிருந்து விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை காப்பாற்ற சென்ற சிவா மற்றொரு தொழிலாளியும் மயங்கி விழுந்துள்ளார். அவர்களை மூவரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் மூவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு நடந்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். அவர்கள் எப்படி இறந்தனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version