Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

120 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பலி! தொடரும் சோகம்

3 Year Boy Died - News4 Tamil Online Tamil News

3 Year Boy Died - News4 Tamil Online Tamil News

சமீபத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு அருகில் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது போல தற்போது தெலுங்கானாவில் 120 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொடிச்சன்பள்ளி என்ற கிராமத்தில் பாப்பன்னபேட்டை பகுதியில் வசிக்கும் கோவர்த்தன் என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் 120 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். 

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றின் அருகே நின்றிருந்த 3 வயதாகும் விவசாயி மகன் சாய் வர்தன் திடீரென திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் கோவர்த்தனின் குடும்பத்தினரும் அருகில் தான் இருந்துள்ளனர்.

இதன்பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ நடந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து சென்றனர். இதனையடுத்து சிறுவனை மீட்கும் வகையில் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டி, 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியை ஆரம்பித்தனர். 

இதில் சிறுவனுக்கு சுவாசத்திற்கு உதவியாக பிராணவாயு செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.எனினும், இந்த மீட்பு முயற்சியில் பலனின்றி 3 வயதாகும் சிறுவன் உயிரிழந்து விட்டான்.அரசு பலமுறை அறிவுறுத்தியும் ஆழ்துளை கிணறுகளை விவசாயிகள் அலட்சியமாக கவனிப்பதால் அடுத்ததடுத்து இது போன்ற சோகங்கள் ஏற்பட்டு வருகிறது.

Exit mobile version