மீன் பிடிக்க சென்ற 3 இளைஞர்கள் மாயம்!! ஒருவர் சடலமாக மீட்பு!!

0
80
3 youths who went to catch fish mayam!! Rescued as a dead body!!

விழுப்புரம் மாவட்டம்: மரக்காணத்தில் ஓடும் கால்வாயில் மீன்பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 சகோதரர்களில் ஒருவர் சடலமாகவும் மீக்கப்பட்டிருக்கிறார். மரக்காணம் சந்தை தோப்பு பகுதி சேர்ந்த கணேசனின் மகன்கள் சூர்யா, செல்வம், லோகேஷ் ஆவர். அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயில்  தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது லோகேஷ் எதிர்ப்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களது அண்ணனை காப்பாற்ற நீரில் குதித்த  2 சகோதரர்கள் அவர்களும் தண்ணீரில் அடித்து செல்லபட்டனர். மூன்று பேரும் கரை திரும்பாத நிலையில் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை இருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தீயணைப்பு துறை தேடுதல் பணியில்  ஈடுபட்டனர்.

ஆனால் இரவு 11 மணி அளவில் தேடுவது பணியை கைவிடப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. கால்வாயில் அடித்து செல்லப்பட்ட லோகேஷன் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவரது சகோதரர்கள் தேடும்பணி  நடைபெற்று  வருகிறது.