Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

30 நாட்களுக்கு முன்பே அலர்ட் கொடுக்கும் ஹார்ட் அட்டாக் சிம்டம்ஸ்!! இது தெரிந்தால் மாரடைப்பு அபாயத்தை தடுத்துவிடலாம்!!

ஹார்ட் அட்டாக் என்பது உயிரை பறிக்கும் இதய நோயாகும்.இதயத்தில் உள்ள தமனி அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.இந்த மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் உயிர் பிழைப்பது அரிதான விஷயமாகிவிடும்.தற்பொழுது இளம் தலைமுறையினர் இடையே மாரடைப்பு அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் இடத்தில் நிச்சயம் இருக்க வேண்டும்.

மாரடைப்பு வர காரணங்கள்:

*கொலஸ்ட்ரால் பிரச்சனை
*தமனி அடைப்பு
*அதிர்ச்சி
*பிற உடல் நலக் கோளாறு

மாரடைப்பிற்கான அறிகுறிகள்:

*நெஞ்சு வலி
*மார்பு அழுத்தம் மற்றும் இறுக்கம்
*மார்பு பகுதியில் அசௌகரிய உணர்வு
*உடல் சோர்வு
*மயக்க உணர்வு

மாரடைப்பு யாருக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது?

1)50 வயதை கடந்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

2)இளம் வயது ஆண்கள் மற்றும் உதிரப்போக்கு நின்ற பெண்களுக்கு மாதவிடாய் வர வாய்ப்பிருக்கிறது.

3)பரம்பரைத் தன்மை,உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது.

4)தூக்கமின்மை,மன அழுத்தப் பிரச்சனையை அனுபவித்து வருபவர்களுக்கு மாரடைப்பு வரலாம்.

5)ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தை பின்பற்றுபவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது.

மாரடைப்பு வருவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்:

அதீத உடல் சோர்வு அதாவது இதற்கு முன்னர் இதுபோன்ற உடல் சோர்வை அனுபவிக்காமல் இருத்தல்,திடீர் தூக்கமின்மை பிரச்சனை,மூச்சுத் திணறல் உள்ளிட்டவை மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளாகும்.

உங்கள் உடலில் ஏதேனும் புதிய மாற்றங்களை உணர்ந்தால் அலட்சியம் கொள்ளாமல் என்னவென்று கவனியுங்கள்.இதுபோன்ற அறிகுறிகளை கவனித்து மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொண்டால் மாரடைப்பு அபாயத்தில் இருந்து எளிதில் தப்பிவிடலாம்.

இரத்த அழுத்தப் பிரச்சனை,புகைப்பழக்கம்,சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது.எனவே உடலை ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தி இதுபோன்ற பதிப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version