Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3 மாதங்களில் 30 பேர் மாயம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

30 people lost in 3 months!! Shocking information that came out!!

30 people lost in 3 months!! Shocking information that came out!!

3 மாதங்களில் 30 பேர் மாயம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டர்கள்.

இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மேலும்  மே 3-ந்தேதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்தது. அதில் இருந்து மணிப்பூர் எரிந்து வருகிறது. 3-ந்தேதி வன்முறை வெடித்த நிலையில் அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய முக்கிய குற்றவாளிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். வன்கொடுமை செய்பட்ட பெண்கள் தரப்பில் வழக்கு பதியப்பட்டது. அதனை தொடர்ந்து தாக்கல் செய்ய வழக்கை உச்ச நீதிமன்றம் தலைமை அமர்வு விசாரித்தது வருகிறது.  இந்த வன்கொடுமை சம்பவத்திற்கு காவல்துறையினர் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மணிப்பூரில் வன்முறை தொடந்து நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வன்முறை நீடித்து வந்த நிலையில் பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்திற்கு வன்முறையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் தீ வைத்து சென்றார்ககள். இது போன்ற பல சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த மணமுறையில் இதுவரை 160 க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்து உள்ளார்கள். மேலும் நூற்றுக்கணக்கான பேர் பலத்த காயமடைந்துள்ளார்கள். இந்த வன்முறையில்  3 மாதங்களாக வீட்டை விட்டு சென்ற 30 பேர் இன்னும் வீடு திரும்பவில்லை. பால் பகுதியில் இருந்து இதுவரை 30 பேர் மாயம் ஆனதாக தெரிவிக்கபடுகிறது.

மேலும் இவர்களை தேடும் பணி தீவரமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்கள், சிறுமிகள் அதிகம் மாயமானதாக கூறபடுகிறது. மேலும் காணமல் போன  குழந்தைகளின் பொற்றோர்கள் தீவரமாக தேடி வருகிறாக்கள். இது அப்பகுதி மக்களுக்கு அதிக அளவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Exit mobile version