30+ வயதுள்ளவர்கள் இந்த க்ரீமை பயன்படுத்தினால் 20 வயது நபர் போல் இளமையாகவும் பிரகாசமாகவும் இருப்பீர்கள்!
முகத்தில் சுருக்கம்,வறட்சி ஏற்பட்டால் அவை முதுமை தோற்றத்தை கொடுத்து விடும்.முன்பெல்லாம் 50 வயதை கடந்தால் தான் முகத்தில் முதுமை தோற்றம் தென்படும்.ஆனால் இன்று 30+ வயதிலேயே பலர் முதுமை தோற்றத்தை அடைந்து விடுகின்றனர்.அதற்கு முக்கிய காரணம் இரசாயனம் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவது தான்.எனவே முக வறட்சி,சுருக்கம் நீங்கி இளமை தோற்றத்துடன் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)வடித்த கஞ்சி
2)நாட்டு தக்காளி
3)கற்றாழை ஜெல்
4)தேன்
5)கஸ்தூரி மஞ்சள்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி வடித்த கஞ்சி ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்மால் சைஸ் நாட்டு தக்காளி போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்டை வடித்த கஞ்சியில் போட்டு கலந்து விடவும்.
அதன் பின்னர் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.இந்த ஜெல்லை தக்காளி சாற்றுடன் கலந்து விடவும்.
பின்னர் 1/4 தேக்கரண்டி தேன் மற்றும் 1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து க்ரீம் பதத்திற்கு கலந்து விடவும்.
இந்த க்ரீமை முகம் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.இந்த க்ரீமை வாரத்தில் மூன்று முறை முகத்திற்கு அப்ளை செய்து குளித்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவாக காணத் தொடங்கும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)கடலை மாவு
2)மஞ்சள் தூள்
3)செம்பருத்தி பூ பேஸ்ட்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கடலை மாவு,1/4 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் ஒரு செம்பருத்தி பூவின் இதழை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
இந்த பேஸ்டை கடலை மாவில் போட்டு நன்கு மிக்ஸ் செய்யவும்.பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி காட்டன் துணியில் துடைக்கவும்.
இந்த கடலைமாவு பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.இவ்வாறு வாரம் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள்,அழுக்கு,இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவாகவும்,மிருதுவாகவும் காணத் தொடங்கும்.