300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி!
கொரோனா தொற்று பாதிப்பை இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்பொழுது தான் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளோம்.இருப்பினும் தொற்று பாதிப்பானது இன்றளவும் குறையவில்லை கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.இரண்டாம் கட்ட அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளனர். அடுத்து வரும் அலையை எதிர்க்க மக்கள் தயார் நிலையிலும் உள்ளனர். அந்தவகையில் மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கென்று தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் என ஒன்றை நடத்தி வருகிறது.முதலில் அந்த முகாம் திட்டம் தொடங்கி தமிழக அரசின் கணக்கின்படி 10 லட்சத்தும் பேர் தடுப்பூசி போடுவார் என்று எண்ணினர்.முதல் வார முகாமிலேயே 20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். திட்டம் முதல் வாரமே வெற்றியடைந்ததையடுத்து அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இருப்பினும் ஒரு சில மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பதால் அவர்களுக்கென்று மாவட்ட ஆட்சியர்கள் புதிய யுக்தியை செயல்படுத்த உள்ளனர். அவ்வாறு நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் மிக்ஸி, வாஷிங் மெஷின் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதேபோல தடுப்பூசி செலுத்தாதவர்களை கூட்டிவரும் அலுவலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரைப் போலவே வேறு யுக்தியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செயல்படுத்த உள்ளார். அதாவது 300 ஆட்டோக்களை பயன்படுத்தி ஒரு லட்சம் தடுப்பூசிகளை செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். 300 ஆட்டோக்கள் கொண்டு தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிற்கு சென்றோ அல்லது அவர்களை அழைத்து வந்தோ முகாம்களில் தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்