வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்!

0
162

வன்முறை சம்பவங்களால் சமூக வலைதளங்களில் 300% அதிகரித்த வெறுப்புணர்வு கருத்துக்கள்! அதிர்ச்சியில் திக்கி திணறிய பேஸ்புக்!

தற்போது இணையத்தை பயன்படுத்தாத ஆள் என்று யாருமே இல்லை. சிறு குழந்தை முதல் கல்வி அறிவு உள்ள முதியோர் வரை என அனைவரும் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக நடைமுறையில் மாறி விட்டது. கணவன் மனைவி இடையேயும், நண்பர்கள் இடையேயும், குடும்பத்தார் இடையேயும் அன்பையும், வெறுப்பையும் சம்பாதிக்க இது மிகவும் உதவுகிறது.

அதே போல் ஒரே வீட்டில் இருந்தாலும் நாம் இதன் மூலம் கருத்துக்களை பரிமாற்றம் செய்யும் அளவிற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் பலர் பல குழுக்களாக இணைந்தும் இதை பயன்படுத்துகிறார்கள். எனவே பெரிய விசயமோ அல்லது சிறிய விசயமோ இதன் மூலம் குறைந்த நேரத்தில் சென்று சேர்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, ஆதரவாகவும், எதிராகவும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பல போராட்டங்கள் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது குறிப்பிடதக்கது. இந்த வன்முறையில் மட்டும் மொத்தம் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 200 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த வன்முறைகளுக்கு பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு நபர்களால் பதிவிடப்பட்ட வெறுப்புணர்வை தூண்டும் கருத்துக்களும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் டெல்லி வன்முறை நடந்த சமயத்தில் மட்டும் பேஸ்புக்கில் வெறுப்புணர்வு கருத்துக்கள் 300 சதவிகிதம் அதிகமாக இருந்ததாகவும், தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் பலர் நடத்திய உள் கட்ட ஆய்வில் டெல்லி வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற இடத்தில் ஃபேஸ்புக்கில் விழிப்புணர்வுக் கருத்துக்கள், மற்றும் வெறுப்புணர்வு கருத்துக்கள் இந்த அளவு அதிகமாக பரவி உள்ளது என்றும், தவறான கருத்துக்கள் மற்றும் தகவல்களின் மூலம் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களும் கட்டுப்படுத்த முடியாமல் பேஸ்புக் திணறியது என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் வன்முறை வெறுப்புணர்வு, மோதல் போக்கு ஆகியவற்றை ஊக்குவிக்கும் பெரிய அளவிலான கருத்துக்களுக்கு இந்தியாவின் பயனாளர்கள் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெறுப்புணர்வு கருத்துக்கள் 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலே, பேஸ்புக் மூலம் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது என்றும், அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.