திருப்பதியில் தரிசனம்! 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு

0
269
#image_title
திருப்பதியில் தரிசனம்! 300 ரூபாய் டிக்கெட் இன்று வெளியீடு.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு விசேஷ நாட்களான யுகாதி, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆங்கில் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
அதிலும் தொடர் விடுமுறை நாட்கள் சேர்ந்தாற் போல் விடுமுறை வந்தாலும் நம் மக்கள் பறக்கும் இடம் திருமலை திருப்பதிதான். தற்போது ஏப்ரல் இறுதி வரை பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் மே மாதம் முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் சூழ்நிலை உள்ளது.
இந்த நாட்களில் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் பல கிமி தூரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்வர். கொரோனா கால கட்டத்தில் திருப்பதி உள்ளிட்ட கோயில்கள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் தற்போது திருப்பதிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாதந்தோறும் 300ரூபாய் தரிசன டிக்கெட்டை திருப்பதி தேவஸ்தான் ஆன்லைனில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான 300ரூபாய் தரிசன டிக்கெட் மார்ச் 27ம் தேதி வெளியானது. காலை 11 மணிக்கு டிக்கெட் வெளியானது. சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தது.
அந்த வகையில் வரும் மே, ஜூன் மாதங்களுக்கான 300 தரிசன டிக்கெட் இன்று வெளியாகிறது. இதை பக்தர்கள் ஆன்லைனில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.