மத்திய அரசு வழங்கும் ரூ.3,00,000 லோன்!! இதை எளிதில் பெறுவது எப்படி?
நம் நாட்டில் பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு தொடர்ந்து பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.பெண்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் துறையில் சாதிக்க வேண்டுமென்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று “பயனாளர் திட்டம்”.
குறிப்பாக ஏழை பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி சிறந்த தொழில் முனைவோராக மாற பயனாளர் திட்டம் பேருதவியாக இருக்கிறது.இந்த பயனாளர் திட்டத்தின் வாயிலாக ரூ.50,000 முதல் ரூ.3,00,000 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெற்றுக் கொள்ள முடியும்.வாழை இலை உற்பத்தி,அழகு நிலையம்,அகர்பத்தி உற்பத்தி,சப்பல் உற்பத்தி,பால் மற்றும் கோழிப்பண்ணை,பூக்கடை,பாய் நெய்தல் உள்ளிட்ட 88 சிறுதொழில்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் கடன்களுக்கு மத்திய அரசு 30% வரை மானியம் வழங்குகிறது.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெண்கள் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
18 முதல் 55 வயது வரை உள்ள ஏழைப்பெண்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.அதனோடு ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்கு கீழ் இருப்பது அவசியம்.
பயனாளர் திட்டத்தில் பயன்பெற தேவைப்படும் ஆவணங்கள்:-
1)ஆதார் அட்டை
2)பிறப்புச் சான்றிதழ்
3)வங்கி பாஸ் புக்
4)வருமானச் சான்றிதழ்
5)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
6)ரேசன் கார்டு
7)உங்கள் தொழிலின் திட்ட அறிக்கை ஆவணங்கள்
பயனாளர் திட்டத்திற்கு ஆன்லைன் அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் வாயிலாக விண்ணப்பம் செய்ய முடியும்.