Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

31st-local-holiday-coming-to-this-district-the-district-collectors-announcement

31st-local-holiday-coming-to-this-district-the-district-collectors-announcement

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

வருகின்ற 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று ஆடி தபசு திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறையானது அளிக்கப்படுகிறது.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஊரில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆடி பௌர்ணமி அன்று வரும் ஆடித்தபசு விழா என்றாலே திருநெல்வேலி மாவட்டத்தின் அருகில் உள்ள சங்கரன்கோவில் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு இந்த ஊரில் பிரசித்தி பெற்ற ஆடித்தபசுக்கு என்று ஒரு பெரிய வரலாறே உள்ளது.

சிவபெருமானா?இல்லை  பெருமாளா?? என்ற பிரச்சனை வந்தபோது உலகம் இரண்டாக பிரிந்து விடக்கூடாது என்பதற்காக ஊசி முனையில் அம்மன் தவம் செய்த நிகழ்வை ஆடி தபசு திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழா தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரபலம் என்பதால் அங்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு ஏதேனும் அரசு தேர்வுகள் இருப்பின் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version