ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!
ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த 6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த 34 பயணிகள் பலியானார்கள். மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்ற பெயர் பெற்ற கராச்சியிலிருந்து 275 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இந்த ஹசரா ரயில் விபத்துக்குள்ளானது. மேலும் பாகிஸ்தான் அரசு இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த விபத்தினை குறித்து ஆய்வு செய்யும் பொழுது ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்ததாக ஆய்வின் மூலம் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததாக கூறி பொறியாளர் மற்றும் மேலாளர் உட்பட 6 பேரை பாகிஸ்தான் ரயில்வே அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.