மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மீண்டும் முடக்கப்படலாம் – அதிகாரிகள் எச்சரிக்கை

0
197
 இங்கிலாந்தில்  ஜூலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் முதன்முறையாக கொரோனா விகிதம் அதிகரித்துள்ளது , கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கட்டுப்பாடுகள்  நடவடிக்கைகள் மீண்டும் கொண்டுவரப்படலாம். மான்செஸ்டரிலும் லைசெஸ்டரிலும் உள்ளூர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று இரவு முதல் பிளாக்பர்ன் மற்றும் ஓல்தாமிலுள்ளவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட உள்ளது.. மிண்டும் ஒரு  முறை இங்கிலாந்தை முடக்குவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தநிலையில் , ஸ்பெயினைப் போலவே  கொரோனா தொற்று இங்கிலாந்தில் அதிகரித்து வரும்  நிலையில், நாட்டை முடக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 அதிக தொற்றுக்கள் ஏற்படப்போகிறது என்று கூறியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது, இன்றைய நிலைமையில் கொரோனா தொற்றுக்கள் கிட்டத்தட்ட இருமடங்கு ஆதிக்கம்  என்றார். செப்டம்பரில் மீண்டும்  பள்ளிகள்  திறக்கும் நிலையில், தொற்றுக்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்று அவர் கூறி உள்ளார். பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பின் பாதிப்பு கண்டறிதல் வாரத்தில் 5,763 லிருந்து 6,418 ஆக தொற்று அதிகரித்துள்ளது, ஆகஸ்ட் 16 வரை 11 சத்வீதம் அதிகமாக அதிகரித்துள்ளது. இருந்து எடுக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளை விட இங்கிலாந்தின்  கொரோனா வைரஸ் விகிதங்கள் அதிகம்.