Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கஷ்டப்படும் 3600 நடன கலைஞர்கள்! உதவி கரம் நீட்டிய நடிகர்!

3600 dancers struggling! Helping hand actor!

3600 dancers struggling! Helping hand actor!

கஷ்டப்படும் 3600 நடன கலைஞர்கள்! உதவி கரம் நீட்டிய நடிகர்!

கொரோனாவின் இரண்டாம் அலை அனைவரது வாழ்விலும் மிகப்பெரிய துயரமாக இருந்து வருகிறது.பல பேரதிர்ச்சி சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது.

சிலரது வாழ்வில் கொரோனா வாழ்வாதரத்தையே அழித்து வருகிறது.

அதிலும் திரையுலகமே முடங்கி உள்ளது.சினிமா தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு நடிகர்,நடிகைகள் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் அக்க்ஷய் குமார் திரைப்பட நடன கலைஞர்களுக்கு உதவ முன் வந்துள்ளார்.3600 குடும்பங்களுக்கு ஒரு மாத மளிகை பொருட்களை வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு தொண்டு நிறுவனம் மூலம் அவர் இந்த உதவியை செய்வதாக கூறியுள்ளார்.

கடந்த வருடம் கொரோனா பரவலின் முதல் அலையின் போதே ரூ.25 கோடி கொடுத்தது நினைவில் கொள்ள வேண்டும்.தற்போது இரண்டாம் அலையின் போதும் தேவைப்படுவோருக்கு ஆக்சிஜன், மருந்து, உணவு ஆகியவற்றை தர கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

Exit mobile version