Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாடு முழுவதும் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்! இவர்கள் இந்த முகாமை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை!

தமிழ்நாட்டில் நோய் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து தீவிர படுத்தப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரையில், பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரையில் 35 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன சிறப்பு முகாம்கள் மூலமாக 5,2200000 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 36வது மெகா தடுப்பூசி முகாம் நாளைய தினம் தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், மற்றும் முக்கிய பகுதிகளில் என ஒட்டுமொத்தமாக 50,000 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. சென்ற வாரம் நடைபெற்ற முகாம்கள் மூலமாக 12.28 லட்சம் பேர் பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை காலை 7:00 மணி முதல் மாலை 7 மணி வரையில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்த முகாம்களை இதுவரையில் தடுப்பூசி செலுத்தாமலிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகின்றது.

தமிழக முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் இந்த சிறப்பு முகாம்களில் அனைத்து தடுப்பூசிகளும் செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

முன்னெச்சரிக்கை என சொல்லப்படும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்களிடம் பெரிய ஆர்வம் காணப்படவில்லை. அந்த தடுப்பூசி எதிர்வரும் 30ம் தேதி வரையில் இலவசமாக செலுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பிறகு இந்த இலவச தடுப்பூசி தொடருமா? இல்லையா? என்ற விவரம் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கால அவகாசத்திற்குள் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி கட்டணமில்லாமல் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளைய தினம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தாமலிருப்பவர்கள் தங்களுக்கருகிலுள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version