Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 4 காம கொடூரர்கள் அதிரடி கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது பள்ளி மாணவி மே மாதம் 28ம் தேதி பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவருக்கு லிஃப்ட் தருவதாக தெரிவித்து சில இளைஞர்கள் காரில் ஏற்றியிருக்கிறார்கள்.

காரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு சென்றவர்கள் காரிலேயே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.

பாதிப்புக்குள்ளான மாணவி வீடு திரும்பியவுடன் அவருடைய தந்தை கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் தொடர்பாக விசாரித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தயக்கம் மற்றும் பயத்துடன் மாணவி தனக்கு ஏற்பட்ட அவலநிலை தொடர்பாக தந்தையிடம் விவரித்திருக்கிறார்.

ஆகவே அவர் உடனடியாக காவல்துறையில் புகார் வழங்கிய சூழ்நிலையில் கண்காணிப்பு கேமரா மற்றும் மாணவியின் வாக்குமூலங்கள் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் அடையாளம் கண்டு கொண்டனர். அதோடு சம்பந்தப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தார்கள்.

குற்றத்தில் ஈடுபட்ட எல்லோரும் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் ஏஐஎம்ஐஅம் கட்சி சட்டசபை உறுப்பினரின் மகன் என்பதால் விசாரணை முறையாக நடைபெறாமல் இழுத்தடிக்கப்படுவதாக தெலுங்கானா மாநில பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை 2 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த மாநில தலைமைச் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறையின் இயக்குனர் மகேந்திர ரெட்டி உள்ளிட்டோருக்கு மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் என்ற சூழ்நிலையில் தப்பிச்சென்ற ஒருவரை காவல்துறையினர் மிகத்தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Exit mobile version