பிரிட்டன் நாட்டில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன குழந்தையை 4 நாட்கள் கடந்து கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் லி கோல்ஸ் என்ற 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை அன்று சூப்பர் மார்கெட்டிற்கு போய் காய்கறி மற்றும் மற்ற பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் பொழுது அங்கு உள்ள கால்வாய் ஒன்றில் பச்சிளம் குழந்தையை கண்டு அதிர்ந்துள்ளார்.என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளார்.
தகவலை கேட்டு அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் குழந்தையின் தாயார் கண்டிப்பாக சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று சந்தேகித்துள்ளனர்.
மேலும் அந்த பிஞ்சு பச்சிளம் குழந்தை நான்கு நாட்களாக கால்வாயில் கண்டிப்பாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த மனநிலையை எப்படி உணர்வதாக லி கோல்ஸிடம் கேட்டபொழுது அவர் கூறியதாவது:” நானும் ஒரு குழந்தைக்கு தந்தையாவேன். அந்த பிஞ்சு கை கால்களை பார்த்த உடனேயே என் நெஞ்சம் பதை பதைத்து விட்டது. நான் பார்த்த உடன் முதலில் அதிர்ந்து விட்டேன். அதிலிருந்து மீண்டு வரவே எனக்கு நேரம் ஆனது.
அந்த இடத்தை விட்டு என்னால் நகர முடியவில்லை. அங்கேயே விழுந்து விடுவேனோ? என்ற பயம் என்னுள் ஏற்பட்டது. பின்பு என்னை சுதாரித்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு தெரிவித்தேன். மேலும் வீட்டிற்கு சென்று என் மகனை அணைத்து கொண்டு என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.