Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மத்திய அரசு வெளியிட்ட அசத்தலான 4 திட்டங்கள்!!

4 important announcements released by the central government! Now everything can be easy!

4 important announcements released by the central government! Now everything can be easy!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மத்திய அரசு வெளியிட்ட அசத்தலான 4 திட்டங்கள்!!

மத்திய அரசு தற்பொழுது தங்களுடைய மத்திய அரசு ஊழியர்களின் நலன் காக்கும் வகையில் பல வகையான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்காக வெளியிட்ட 4 முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்.

அறிவிப்பு 1: வருங்கால வைப்பு நிதி தொடர்பாக…

மத்திய அரசு தங்களுடைய அரசு ஊழியர்களுக்காக வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மத்திய அரசில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஜி.ஐ.எஸ்(GIS) எனப்படும் குரூப் இன்சூரன்ஸ் திட்டம் மூலமாக கணிசமான தொகை பிடிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த ஜிஐஎஸ் தொகை இனி பிடிக்கப்படமாட்டாது என்று EPFO அறிவித்துள்ளது.

இந்த ஜிஐஎஸ் திட்டமானது 1982ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர் குழுக் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலமாக ஒரு அரசு ஊழியர் இரண்டு வகையில் நன்மை பெறலாம். முதலாவதாக அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இரண்டாவதாக மொத்த தொகையையும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் தற்பொழுது ஜிஐஎஸ் திட்டத்திற்கான தொகை பிடிக்கப்படாது என்று EPFO அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் 1 2013ம் ஆண்டுக்கு பிறகு மத்திய அரசில் வேலைக்கு சேர்ந்து வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்பட்ட ஊழியர்களுக்கு ஜிஐஎஸ் திட்டம் மூலமாக தொகை பிடிக்கப்படாது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த ஜிஐஎஸ் திட்டம் நிறுத்தப்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு மாதம் வழங்கப்படும் நிகர சம்பளம் அதிகரிக்கும். மேலும் இதுவரை கழிக்கப்பட்ட தொகைக்கு பதிலாக ஒரு மொத்த தொகை அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகின்றது. சேமிப்பு மற்றும் காப்பீடு என்ற இரண்டு நோக்கங்களுக்காக செயலில் இருந்த குழுக் காப்பீட்டு திட்டமான ஜிஐஎஸ் விலக்கப்படுவதால் மாதம் வழங்கப்படும் நிகர சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்படலாம். ஆனால் இது ஓய்வு பெறும் பொழுது அவர்களுக்கு வழங்கப்படும் மொத்த தொகையை விட மிகவும் குறைவுதான்.

அறிவிப்பு 2: அகவிலைப்படி உயர்வு தொடர்பாக…

அறிவிப்பு ஒன்றை போலவே மத்திய அரசு தங்களுடைய ஊழியர்களுக்காக அகவிலைப்படி உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தற்பொழுது உயர்த்தப்படும் அகவிலைப்படியின் சதவீதம் 3 ஆக இருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல் சீனியர் அரசு ஊழியர்கள் பலன் பெற சுமார் 1.90 லட்சம் ரூபாய் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒன்றரை கோடி குடும்பங்கள் பலன் பெறும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அது 50 சதவீதமாக உயர்ந்தது. இதையடுத்து அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவீதமாக இருக்கக் கூடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் மொத்த சதவீதம் 53 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதனால் தற்பொழுது 15000 ரூபாய் சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியர்கள் 16500 ரூபாய் பெறப்போகின்றனர்.

அறிவிப்பு 3: CGHS அட்டை வழங்குவது தொடர்பாக…

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் CGHS அட்டை வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதாவது மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கும் மத்திய அரசு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றது. இந்த CGHS திட்டம் மூலமாக இந்தியா முழுவதிலும் உள்ள 80 நகரங்களில் சுமார் 40 லட்சம் நபர்கள் மருத்துவ சேவையை பெற்று வருகின்றனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் CGHS தொடர்பாக தற்பொழுது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் CGHS தொடர்பாக “தற்பொழுது அரசு பணியில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் புதிய CGHS கார்டுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செலுத்திய பின்னர் அந்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் கையெழுத்து இட்டு புகைப்படம் ஒட்டி அதை தற்பொழுது பணியாற்றி வரும் துறையில் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு புதிய CGHS அட்டை வழங்கப்படும்” என்று கூறியுள்ளது. அதே போல ஓய்வு பெற்றவர்கள் அவர்கள் அதற்காக நான் இருக்கும் துறையில் CGHS அட்டைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

அறிவிப்பு 4: ஊழியர் ஓய்வூதிய திட்டம் தொடர்பாக…

மத்திய அரசு ஊழியர்களுக்காக ஓய்வூதியத் திட்டம் தொடர்பாகவும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது EPS என்று அழைக்கப்படும் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் முக்கிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது இந்த புதிய அறிவிப்பு எதைப்பற்றி என்றால் Withdrawal Benefits தொடர்பாகத்தான். தற்பொழுது மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு குறைவாக பணியாற்றி வரும் அரசு ஊழியர்களுக்கும் Withdrawal Benefits என்று அழைக்கப்படும் திரும்பப் பெறும் பலன்களை கொண்டு வந்துள்ளது.

அதாவது இதற்கு முன்பு வரை ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருந்து விலகினால் அவர்களுக்கு திரும்பப் பெறும் பலன்கள் கிடைக்காது. ஆனால் தற்பொழுது மத்திய அரசானது 6 மாதங்களுக்கு குறைவாக பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த திரும்பப் பெறும் பலன்கள் கிடைக்கும் விதமாக மாற்றம் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசு இதற்காக மத்திய அரசு அட்டவணை D யையும் மாற்றியுள்ளது. இந்த அட்டவணை D 58 வயதை தாண்டிய ஊழியர்களையும் இந்த திட்டத்தை பெற தகுதி இல்லாத ஊழியர்களையும் குறிக்கின்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டம் மூலமாக தற்பொழுது 7 லட்சம் பேர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 2023- 24 ஆண்டில் திரும்பப் பெறும் பலன்களுக்காக 7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த விண்ணப்பங்களை மத்திய அரசு நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version