Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்டுக்கறியும் சப்பாத்தியும் சாப்பிட்ட 4 பேர் பலி! கர்நாடகாவில் நடந்த துயரம்! என்ன காரணம் தெரியுமா?

4 people died after eating mutton and chapati!! Tragedy in Karnataka! Do you know what the reason is??

4 people died after eating mutton and chapati!! Tragedy in Karnataka! Do you know what the reason is??

ஆட்டுக்கறியும் சப்பாத்தியும் சாப்பிட்ட 4 பேர் பலி!! கர்நாடகாவில் நடந்த துயரம்! என்ன காரணம் தெரியுமா??
கர்நாடக மாநிலத்தில் சப்பாத்தி மற்றும் ஆட்டுக்கறியை ருசித்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் கல்லூர் கிராமத்தில் கடந்த ஜூலை 31ம் தேதி பீமண்ணா என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் சப்பாத்தி மற்றும் மட்டன் குழம்பு செய்து சாப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் பீமண்ணா மற்றும் அவருடைய மனைவி ஈரம்மா, மகள்கள் மல்லம்மா, பார்வதி, மகன் மல்லேஷ் ஆகிய ஐந்து பேருக்கும் வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் 5 பேரும் சிகிச்சை பெறுவதற்கு சிரிவாராவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராய்ச்சூரில் இருக்கும் அரசு கிட்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அரசு ரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து சிகிச்சை பலனின்றி பீமண்ணா, மனைவி ஈரம்மா, மகன் மல்லேஷ், மகள் பார்வதி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொரு மகள் மல்லம்மா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உடல் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து நான்கு பேர் இறந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து தெரிந்து கொள்ள விசாரணை நடைபெற்றது. இதையடுத்து முதல் கட்டமாக காவலர்கள் பீமண்ணா அவர்களின் வீட்டுக்கு சென்று அவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரியை சேகரித்தனர். பின்னர் அந்த உணவின் மாதிரியை ஆய்வுக்கு அனுப்பினர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ராய்ச்சூர் மாவட்ட எஸ்பி புட்ட மாதய்யா அவர்கள் “பீமண்ணா குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த புதன் கிழமை(ஜூலை31) சப்பாத்தி மற்றும் மட்டன் குழம்பு சாப்பிட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறிது நேரத்தில் வயிற்று வலி வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் இறப்பு குறித்து சிரிவாரா காவல்துறையினர் இயற்கைக்கு மாறான இறப்பு என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் இறப்புக்கான காரணம் உணவு பரிசோதனை முடிந்து ரிசல்ட் வந்த பின்னர் தான் தெரியும்” என்று கூறியுள்ளார். சப்பாத்தி மற்றும் மட்டன் குழம்பு சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Exit mobile version