Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெட்ரோல் பங்க் வெடித்த அதிர்ச்சி சம்பவம்!! உடல் கருகி பரிதாபமாக 4 பேர் உயிரிழந்த கொடூரம்!!

4 people died in a petrol pump explosion in the state of Rajasthan

4 people died in a petrol pump explosion in the state of Rajasthan

Rajasthan: ராஜஸ்தான்  மாநிலத்தில் பெட்ரோல் பங்க் வெடித்தது 4 பேர் உயிரிழந்த சோகம்.

பெட்ரோல் பங்க் ஒன்றில் தீ விபத்து நடந்து இருப்பது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் பரவி பார்ப்பவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அதாவது இச் சம்பவம் ராஜஸ்தான்  மாநிலத்தில்   ஜெய்ப்பூர் நகரில் நடந்து இருக்கிறது.  கடந்த வெள்ளிக்கிழமை  பெட்ரோல் பங்கில்  அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பங்கில்  எல்பிஜி நிறுவனத்தின் சிஎன்ஜி கேஸ் டேங்கர் ஒன்று பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அப்போது, அதிகமாக வந்த டிராக்டர் ஒன்று வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சிஎன்ஜி கேஸ் டேங்கர் மீது போதி இருக்கிறது. அப்போது, பலத்த சத்தத்துடன் டேங்கர் வெடித்து தீ பற்றி எரிந்து உள்ளது.

அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்கு  தீ  மளமளவென  பரவி இருக்கிறது. இந்த தீ விபத்தில் சம்ப இடத்திலேயே 5 பேர் உடல் கருகி உயிரிழந்து  இருக்கிறார்கள். மேலும், பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது தீ பற்ற தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வர நீண்ட நேரம் போராடினார்கள்.

மேலும், இந்த விபத்தில் காயமானவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.  இந்த விபத்து தொடர்பாக காவல் துரையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Exit mobile version