Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!!

#image_title

டெல்லியில் பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிரை காவு வாங்கிய தீ – சோக சம்பவம்!!

இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் ஷஹ்தரா என்னும் பகுதியிலுள்ள சாஸ்திரி நகரில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. கார் பார்க்கிங் வசதியோடு கொண்டு 4 மாடிகள் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இத்தகைய கட்டிடத்தில் திடீரென இன்று(மார்ச்.,14) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் கார் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட தீயானது மளமளவென பரவ துவங்கியது. இதனையறிந்த குடியிருப்பு வாசிகள் கட்டிடத்தில் இருந்து அலறியடித்து கொண்டு வெளியேற துவங்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அளிக்கப்பட்ட உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காவல்துறையும் தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பலர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, விபத்துக்கான காரணம் குறித்து தங்கள் விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

Exit mobile version