Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

40 சவரன் நகை 2 லட்சம் பணம் திருட்டு! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

திருச்சியில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 40 சவரன் நகை, 2லட்சம் ரொக்கபணம் உள்ளிட்டவற்றை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் டோல்கேட் அருகே இருக்கக்கூடிய ராஜகோபால் நகரில் வசித்து வருபவர் முருகேசன். இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் திருச்சி மாவட்டம் நொச்சியம் பகுதியில் இருக்கக்கூடிய பகுதியில் பெட்ரோல் விற்பனை செய்யும் நிலையம் நடத்தி வருகிறார்.

நேற்று இரவு முருகேசன் அவரது மனைவி மகன் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் உள்ள அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். பின் பெட்ரோல் நிலையத்திற்கு செல்லும் முன்பாக தனது படுக்கை அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற முருகேசன் ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.

இது குறித்து போலீஸில் தகவல் தெரிவித்ததும் அவர் வீட்டிற்கு வந்த போலீஸ் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ரேகைகளை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் 40 பவுன் நகை, ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. 

Exit mobile version