ஆப்பிரிக்கா: ஒரு கொரில்லா 40 ஆண்டுகளாக சிறையில் உள்ளது. வெளியே விடாமல் இருக்கும் மிருககாட்சி நிறுவனம்.
மனித இனங்களைப் போலவே கொரில்லாவும் கூட்டமாக வாழக்கூடிய ஒன்று. இதன் பிறப்பிடமாக ஆப்பிரிக்கா உள்ள நிலையில் புவா நெய் என்ற கொரில்லா மட்டும் 40 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறது. அந்த வகையில் பாங்க் காக் மிருக காட்சி சாலையில் மூன்று வயதிலிருந்து தற்பொழுது வரை கூண்டுக்குள்ளேயே வைத்துள்ளனர்.
இதனை விடுவிக்க பாங்க் காக் பகுதியில் மிகப்பெரிய குடும்பமான செர்ம்சிரிமோங்களின் குடும்பத்தினர் ரூ. 7 கோடி தருவதாக பேச்சுவார்த்தை நடத்தியும் அதனை மிருக காட்சி சாலை ஏற்கவில்லை. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அங்கு வரும் பார்வையாளர்களை இந்த கொரில்லா மிகவும் கவர்வதால் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் இதனை விடுவிக்க மருத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் புவா நெய்யை வெளியே விட கோரி விலங்குகளின் பாதுகாப்பு அமைப்பு பீட்டா தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றது. ஆனால் அந்த மிருகக்காட்சி நிறுவனமானது எதற்கும் செவி சாய்ப்பதாக தெரியவில்லை. தற்பொழுது அந்த புவாநெய் கொரில்லாவானது சிறைக்குள்ளேயே தனது 41 வது கிறிஸ்துமஸ்ஸை கொண்டாட உள்ளது.