நோய் தொற்று பாதிப்பு! முன்கூட்டியே நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

0
129

நாட்டில் நோய் தொற்றின் இரண்டாவது ஆலையின் தாக்கம் நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 1993 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால் 3573 பெயர் உயிரிழந்திருக்கிறார்கள், அதேபோல இந்தியாவில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 96 லட்சத்து 66 ஆயிரத்து 969 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த தொற்றில் இருந்து பூரண நலம் அடைந்தவரின் எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 84 ஆயிரத்து 406 ஆக அதிகரித்திருக்கிறது. நோய் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 853 ஆக அதிகரித்திருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது ஆனால் பொதுமக்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் இந்த பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலையில் இந்தியா இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், மாநில அரசுகளுக்கு பேரிடர் நிதியாக ரூபாய் 8873 கோடி பணத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது இதில் 50 சதவீத நிதியை மாநில அரசுகள் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் வழங்க வேண்டிய நிதியை இந்த நோய் தடுப்பு பணிகளுக்காக மத்திய அரசு முன்கூட்டியே வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் வெண்டிலேட்டர் ஆம்புலன்ஸ் சேவை போன்றவைகளை மேம்படுத்துவதற்கு இந்த நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.