Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

#image_title

இனி தெருவில் குப்பை கொட்டினால் ரூ.4000 அபராதம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு!!!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாலும் அது மட்டுமின்றி சிங்கார சென்னை 2.0 திட்ட  வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை மக்கள் குப்பைகளை தெருவில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை  மீறி மக்கள் பெரிய அளவிலான குப்பைகளை கொட்டினால் அதாவது பயன்படுத்தாத மெத்தைகள் பயன்படுத்தாத துணிகள் போன்றவற்றை சாலையில் எறிந்தால் 1டன்  அளவிலான  குப்பைக்கு ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது மட்டுமின்றி ஹவுசிங்  போர்டு  அடுக்குமாடி குடியிருப்புகளை சுற்றியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் குப்பைகளை கொட்டும் பொதுமக்கள் சற்று பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள்  மக்கும் குப்பை மக்கா குப்பை என இவற்றை இரண்டையும் தனித்தனியாக பிரித்து அகற்ற வேண்டும்.இவ்வாறு தனித்தனியாக குப்பைகளை அகற்றும்பொழுது மாநகராட்சி தூய்மை பணி செய்பவர்களுக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும்.அது மட்டுமன்றி கழிவு மேலாண்மையை அரசு சரிவர செய்ய உதவியாக இருக்கும். மேலும் இந்த அறிவிப்பை மீறி செயல்படும் பொது மக்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Exit mobile version