Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டில் புதிதாக 4000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கிய நோய்த்தொற்று பரவல் தற்போது வரையில் நீடித்து வருகிறது இந்த நோய்த்தொற்று பரவல் உருவாகி சற்றேறக்குறைய 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் இந்த நோய்த்தொற்று பரவல் குறைந்த பாடில்லை.இந்த நோய் தோற்று பரவலுக்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், சமீப காலமாக இந்தியாவில் மெல்ல, மெல்ல, இந்த நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.அந்த விதத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,184 பேருக்கு இந்த நோய் தொற்றுப்பரவல் உறுதியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.. இதில் அதிகபட்சமாக கேரளாவில் புதிதாக 1421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 4,29,80067 இன்று அதிகரித்திருக்கிறது.

இந்த நோய்த்தொற்று பரவலால் மேலும் 104 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உட்பட 88 பேர் அடங்குவர் என்று தெரிவிக்கப்படுகிறது ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,15,459 என்று அதிகரித்திருக்கிறது.நோய்தொற்று பாதிப்பிலிருந்து கூடுதலாக 6,554 பேர் விடுபட்டிருக்கிறார்கள் இதனால் குணமடைந்தவர்கள் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,24,20,120 என அதிகரித்திருக்கிறது.

தற்சமயம் 44,488 பேர் நோய்தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்று முன்தினம் தை விட 2474 குறைவு என்று சொல்லப்படுகிறது.நாடு முழுவதும் இதுவரையில் 179.53 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

இதில் நேற்று 18.23 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.இதற்கிடையே நேற்றைய தினம் 8,73,974 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது ஒட்டுமொத்த பரிசோதனை எண்ணிக்கை 77. 60 கோடியாக இருக்கிறது.

Exit mobile version