ஒரேஆண்டில் 42 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்:! கால அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு தேர்வாணையம்!!
கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு சில தேர்வுகள் நடைபெறாமல் போனது.தற்போது 2021 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் 42 வகை வேலைவாய்ப்புக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி,குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்விற்கான அறிவிப்பு மே மாதமும்,குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமும், வெளியிடப்படும் என்று அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வு ஜூலை மாதமும், ஒருங்கிணைந்த இன்ஜினியர் தேர்வு ஏப்ரல் மாதமும், வெளியிடப்படும் என்றும் அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
அறிவிப்பின்படி போலீஸ் டிஎஸ்பி, துணை கலெக்டர், வணிகவரித்துறை உதவி ஆணையர்,தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மாவட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கம் துணை பதிவாளர், உள்ளிட்ட குரூப் 1 பதவிகளுக்கான தேர்வு வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் 2021 ஆம் ஆண்டு கால அட்டவணையை(annular plan 2021) தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஆபீஷியல் இணைய தளமான, www.tnpsc.gov.in ல் தெரிந்துகொள்ளலாம்.