திங்கட்கிழமை (டிசம்பர் 9) அன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் பொதுத்துறை வங்கிகள் ரூ.42,000 கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கிகளின் விவரங்கள் :-
✓ SBI – ரூ.8,312 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
✓ PNB – ரூ.8,061 கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது.
✓ UBI – ரூ.6,344 கோடியும் தள்ளுபடி செய்துள்ளது.
✓ BOB – ரூ. 5,925 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
2023-24 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது. 2022-23ல் இது 1.18 லட்சம் கோடியாக இருந்தது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்தார்.
வங்கிகள் தங்கள் கணக்குகளை சரிசெய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. வரிச் சலுகைகளைப் பெறுவதைத் தவிர, அவை திறமையான மூலதனப் பயன்பாட்டையும் வழங்குகின்றன.எனவே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களின் கொள்கைகளின்படி அவர்கள் வாராக் கடனை தள்ளுபடி செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
குறிப்பாக , தள்ளுபடி செய்யப்பட்ட கடனை திரும்பப் பெறும் செயல்முறை தொடரும் என்றும், தள்ளுபடியால் கடன் வாங்கியவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த தள்ளுபடிகள் கடன் வாங்குபவர்களின் பொறுப்புகளைத் தள்ளுபடி செய்யாது என்றும், மீட்பு முயற்சிகள் தொடர்கின்றன என்றும் நிதி அமைச்சகமும் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.