Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

உலகிலேயே முத்த மொழி தமிழ் தான் என்றும் கீழடியில் 3000 மற்றும் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதை நாம் பெருமையாக சொல்லி கொண்டிருக்கின்றோம்

இந்த நிலையில் 44 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள் இந்தோனேஷியாவில் உள்ள குகையில் கிடைத்துள்ளதால் அந்த குகையில் பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது

மனித வரலாற்றிலே மிகவும் பழமையானதாக கருதப்படும் ஓவியம் இந்த குகை ஓவியம் தான் என்று கூறப்படுகிறது. இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த குகை ஓவியம் 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குகை ஓவியங்களை பழங்காலத்தில் குகையில் வாழ்ந்த மனிதர்கள் வரைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. மனித உடல் பாகங்கள், விலங்குகளில் தலைகள், எருமை வேட்டை, பன்றி உள்ளிட்டவை இந்த ஓவியங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த ஓவியங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த குகையில் இன்னும் இதுபோன்ற குகைகள் இருக்கின்றதா? என்பதை அறிய தொல்பொருள் துறையில் இருந்து தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

Exit mobile version