Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதம் 45000 ரூபாயில் தமிழக மீனவளப் பல்கலை கழகத்தில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பாருங்க!!!

#image_title

மாதம் 45000 ரூபாயில் தமிழக மீனவளப் பல்கலை கழகத்தில் வேலை!!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்று பாருங்க!!!

தமிழகத்தில் இயங்கி வரும் டி.என்.ஜெ.எப்.யு என்று அழைக்கப்படும் தமிழ்நாடு டாக்டர். ஜெயலலிதா மீன்வளப் பல்கலை கழகத்தில் மாதம் 4500 ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ன தகுதி, விண்ணப்பிக்கும் முறை, வேலை பற்றிய மற்ற விபரங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலை கழகத்தில் மீன் வளர்ப்பு, மீன் வளப் பொருளாதாரம், மீன் பிடித்தல், மீன் உயிரியல், மீன் உயர்தொழில்நுட்பம், மீன்கள் வாழும் சூழ்நிலையியல் போன்ற மீன்கள் தொடர்பான படிப்புகள் உள்ளது. இந்த பல்கலை கழகத்தில் பொது நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தற்பொழுது இந்த பல்கலை கழகத்தில் காலியாக இருக்கும் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றிய விவரங்கள்…

பணியின் பெயர் – உதவி பேராசிரியர்

கல்வித் தகுதி – எம்.பி.ஏ பட்டத்தில் ஹெச்.ஆர்.எம்(HRM) பிரிவு படித்திருக்க வேண்டும். மேலும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.ஹெச்.டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் பற்றிய விவரங்கள் – எம்.பி.ஏ பட்டம் முடித்து நெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 40000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். அதே போல எம்.பி.ஏ பட்டம் முடித்து பி.ஹெச்.டி முடித்தவர்களுக்கு மாதம் 45000 சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை – தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள னப் பல்கலை கழகத்தின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி – The Dean I/C, (Basic Sciences), Institute Of Fisheries Post Graduate Studies, OMR, Vaniyanchavadi, Chennai – 603 103

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.09.2023

 

 

Exit mobile version