நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!!

0
285
4,650 crore rupees confiscated across the country!! Shocking news told by the Election Commission..!!

நாடு முழுவதும் 4,650 கோடி ரூபாய் பறிமுதல்!!தேர்தல் ஆணையம் கூறிய ஷாக்கிங் நியூஸ்..!!

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதியும், 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. 

அதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதவிர ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் இந்த தேர்தலுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. 

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு ஷாக்கிங் தகவலை கூறியுள்ளது. அதாவது இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் தான் அதிக பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம். அதுவும் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி, முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட மொத்த பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.3475 கோடியாகும், ஆனால், இந்தாண்டு இப்போது வரை மட்டும் நாடு முழுவதும் சுமார் ரூ.4650 கோடி பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது. அதிலும் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தினமும் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படுவதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.