46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கிய வரி ரத்தானது! மகிழ்ச்சியின் தொழிலாளர்கள்!

0
169

சென்ற 1 ம் தேதி  முதல் அனைத்து ஆடைக்கான வரியையும் 12 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையை சார்ந்தவர்கள் மத்திய நிதித்துறை மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்கள் தமிழக நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து ஆடைக்கான வரி உள்ளிட்டவற்றை வைத்து கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள், மத்திய ஜிஎஸ்டி கவுன்சிலின் 46வது கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் இருக்கின்ற ஆயத்த ஆடைக்கான வரியை 12 சதவீதமாக உயர்த்துவதற்கான முடிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே தொடர்ச்சியான கோரிக்கை நிறைவேறியதால் திருப்பூர் ஆடை உற்பத்தித் துறையை சார்ந்தவர்கள் இடையில் மகிழ்ச்சி பொங்கி இருக்கிறது.

ஏ இ பி சி தலைவர் சக்திவேல் 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளுக்கான வரியை 12 சதவீதமாக உயர்த்தும் முடிவை ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தற்போதைய கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்கின்ற ஆடைகளுக்கு 5 சதவீத வரியை தொடரும் என்ற காரணத்தால், ஆடைகளின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்.

ஆடை வர்த்தகம் பெருகும் இதன்காரணமாக, பொதுமக்களும் பயனடைவார்கள் இந்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எங்கள் நிறுவனம் பாராட்டு தெரிவிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

லகு உத்யோக் பாரதி தேசிய இணை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் ஆயத்த ஆடைக்கான 5 சதவீத வரியை 12 சதவீதமாக உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஆடைகளின் விலை அதிகரிக்கும் உற்பத்தி மற்றும் விற்பனை சரிதத்தையும் சாதாரண மக்களின் வாங்கும் திறன் பாதிக்கும் இதன் காரணமாக, வரியை உயர்த்த கூடாது என்று அந்த அமைப்பின் சார்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

சைமா, டீமா. உட்பட திருப்பூர் தொழில் அமைப்பினருடன் ஒன்றிணைந்து கடந்த வாரம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை வைத்தோம், கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆடைக்கான வரி உயர்வை ரத்து செய்து புத்தாண்டு தினத்தில் இனிப்பு வழங்கியிருக்கிறது மத்திய அரசு என்று கூறியிருக்கிறார்.

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஈஸ்வரன் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் விதமாக ஆடைக்கான வரி உயர்வை தற்காலிகமாக ரத்து செய்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதனால் சாதாரண மக்கள் மீது விழ இருந்த வரிச்சுமை விலகி இருக்கிறது.

ஆயிரம் ரூபாய்க்கு கீழே இருக்கின்ற ஆடைக்கான வரி நிரந்தரமாக 5% என்ற நிலையிலேயே தொடர வேண்டும். திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்து ரத்தினம் ஆடைக்கான வரி உயர்வை ரத்து செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மனிதகுலத்தின் அத்தியாவசியமான பொருள் ஆடை எதிர்வரும் காலங்களில் வரியை உயர்த்த கூடாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.