கோலிவுட் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற ஒரு தொடரானது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மேலும், அதில் பாரதி கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை தன்னுடையது அல்ல என்று நினைக்கிறான். எனவே இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இதுவே இந்த நாடகத்தின் கதையாகும். ஆனால் நிஜத்தில் இதேபோல கண்ணம்மாவின் போராட்டங்களை போல புதுப்புது பிரச்சினைகளுடன் சென்னையில் நடந்துள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொளத்தூர் பகுதியில் முருகன் நகரை சேர்ந்தவர் தான் இளவரசி. மேலும், இவர் 1975ஆம் ஆண்டில் தன்னுடைய பத்தொன்பதாம் வயதில் விஜய கோபாலன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவியாக 7 மாதங்கள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.
ஏனோ அதன் பின் பல பிரச்சனைகள் ஏற்பட்டு இவர்கள் பிரிந்து விட்டனர். இளவரசி கருவுற்றதும் கழற்றிவிட விஜய் கோபாலன் திட்டமிட்டு திடீரென ஒருநாள் வேலைக்காக ஹைதராபாத் செய்வதாக சொல்லி விட்டு புறப்பட்டு சென்று திரும்பி வரவில்லை. கடிதங்கள் ஒன்று மட்டுமே தொடர்பில் இருந்த காலம் என்பதால், செல்போன்கள் இல்லாத காரணத்தால், அவர் எங்கே சென்றார் என்ன ஆனார் என்று எதுவும் தெரியவில்லை.
இளவரசி வயிற்றில் குழந்தை சுமந்து கொண்டே விஜய் பாலனைத் தேடி அலைந்தார். ஆனால், அவரைப் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இளவரசிக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. கணவர் எங்கு சென்றார் எனன செய்வதென்று தெரியாமல் அவள் கணவனை தேடி, போராட்டமாகவே இவருடைய வாழ்க்கை இருந்தது.
தனியாக தவித்துக் கொண்டிருந்த இளவரசிக்கு 10 ஆண்டுகளுக்குப்பின் இவரது கணவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதுடன் காவல்துறையில் பணிசெய்து வருகிறார் என்று ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. மேலும், 1985 ஆம் ஆண்டு கவனிக்க வேண்டிய விஷயமாக திருமணம் முடிந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 35 ஆண்டுகளுக்கு முன் மணம் புரிந்த தன்னையும் குழந்தையும் தவிக்கவிட்டு ஒரு திருமணம் செய்து கொண்ட கணவர் விஜய கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விஜய கோபாலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது இளவரசியை எனக்கு தெரியாது, அவருக்கு பிறந்த குழந்தையும் எனக்கு தெரியாது என்று விஜய கோபாலன் மறுத்துவிட்டார். மேலும் 35 ஆண்டுகள் ஆன நிலையில் 2010ஆம் ஆண்டு இது தொடர்பாக நீதிமன்றத்தில் இளவரசியின் மகள் வழக்கு தொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்ட இந்த பரிசோதனை முடிவில் இளவரசிக்கு விஜயபாலன் மூலமாக தான் அந்த பெண் குழந்தை பிறந்தது என்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், 2020ஆம் ஆண்டில் அடுத்த 10 ஆண்டுகள் கழித்து தன் முயற்சியால் இளவரசி சென்னை தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதிதாக புகார் செய்தார். காவல்துறை வழக்கு பதிவு செய்து திருமணம் முடிந்து 46 ஆண்டுகள் ஆகின்றன. விஜய கோபாலன் கடைசியாக சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இப்போது விஜய கோபாலனுக்கு வயது 72. இளவரசிக்கு இன்று வயது 65 விஜய கோபாலனுக்கு பிறந்த மகளுக்கு இப்போது வயது 42. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சட்டத்தின் மூலமாக 46 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு விஜயகோபாலன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் பெண்ணை ஏமாற்றியது, இன்னொரு திருமணம் என காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. மேலும் விஜயகோபாலனை தேடும் பணி நடைபெற்று வருகிறது