ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் சேர்ந்தவருக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த தண்டனை!

0
126

வரும் பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று முக்கிய கட்சிகளும் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பாஜக வேட்பாளர்களுக்கு வாக்குகளைத் திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜகவில் இருந்த கபில் மிஸ்ரா என்பவர் திடீரென பாஜகவில் சேர்ந்து தற்போது பாஜக வேட்பாளராக டெல்லி மாடல் டவுன் என்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவுசெய்தார்.

பிப்ரவரி எட்டாம் தேதி டெல்லி வீதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் போர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டை தேர்தலுடன் ஒப்பிட்டு இருந்த அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்தை உடனடியாக டெலிட் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனை அடுத்து அவர் அந்த டுவிட்டை டெலிட் செய்துவிட்டார்.

மேலும் கபில் மிஸ்ரா 48 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தர்வு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனவே இன்று மாலை 5 மணி முதல் 48 மணி நேரம் கபில் மிஸ்ரா தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.