Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 484 காலி பணியிடங்கள்! வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க !!

#image_title

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 484 காலி பணியிடங்கள்! வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 484 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் தற்பொழுது காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியாகி உள்ளது.
அதன்படி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சஃப்பை கர்மாச்சாரி கம் சப் ஸ்டாப் என்ற பணியிடத்திற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக 14500 ரூபாய் முதல் 28145 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் 484 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
இந்த பணிக்கு வரும் ஜனவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்தியா முழுவதிலும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிகளில் பணிபுரிய இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.
பணியை பற்றிய மற்ற விவரம், விண்ணப்பக் கட்டணம் முதலிய பிற விவரங்களை www.centralbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
Exit mobile version