Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4ஜி இணைய சேவை

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் படிப்படியாக 4ஜி சேவை தொங்குவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி அட்டர்னி ஜெனரல்,கே.கே.வேணுகோபால்ஆகியோர் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 16 தேதிக்குப் பின் இணையசேவை படிப்படியாக வழங்கப்படும் என்றும் முதல் 2 மாதங்களுக்கு சூழ்நிலைகளை ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

எல்லைப் பகுதிகளில்அதிவேகஇணைய சேவை தருவது இயலாது என்றும் சில பகுதிகளுக்கு மட்டுமே தற்போது இணைய சேவை தர உள்ளதாகவும் கூறியுள்ளது.

மத்திய அரசு உத்தரவு படி ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாநிலத்தில் தலா ஒரு மாவட்டத்துக்கு முதலில் சோதனை அடிப்படையில் 4ஜி இணையச்சேவையை வழங்க அனுமதியளிப்போம் என்று தெரிவித்துள்ளது.

இதன் செயல்கள் பற்றி ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்யப்படும் என்றும் ஒட்டுமொத்தமாக 2 மாதங்களுக்குப் பிறகு சூழ்நிலை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மேலும் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.அதிவேக இணைய சேவை அமல்படுத்தினால் நாட்டு மக்களிடையே அமைதி சீர்குலையும் நிலையில் இத்தனை காலம் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும், இது குறித்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

Exit mobile version