இரும்பு பாத்திரங்களால் உடலுக்கு கிடைக்கும் 5 அற்புத நன்மைகள்!!
சமையல் செய்வதற்கு மண் பாத்திரம்,அலுமியம்,இரும்பு, நான் ஸ்டிக்,பித்தளை,செம்பு,எவர் சில்வர் என்று பல்வேறு வகைகளில் பாத்திர பொருட்கள் பயன்பாட்டில் இருக்கிறது.இவற்றில் மண்,இரும்பு,பித்தளை,செம்பு ஆகியவை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பயன்படுத்தி வரும் முக்கிய சமையல் பாத்திரங்கள் ஆகும்.இவற்றில் சமைத்து உண்பதினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது.ஆனால் நவீன காலத்தில் இந்த பாத்திரங்களின் பயன்பாடு குறைந்து அலுமியம்,நான் ஸ்டிக்,எவர் சில்வர் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டோம்.இதனால் உடலுக்கும்,சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்த வகையான பொருட்கள் அதிகம் பயன்பாட்டில் இருந்தாலும் மக்கள் சிலர் இரும்பு,மண் பாத்திரங்களின் மகிமை உணர்ந்து மீண்டும் பழைய முறைப்படி சமைக்க தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஓன்றாக இருக்கிறது.மண் பாத்திரத்திற்கு அடுத்து அதிக நன்மை கொண்ட பொருளாக இரும்பு திகழ்கிறது.இந்த இரும்பு பாத்திரங்களில் சமைத்து உண்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் உண்மையில் ஆச்சரியப்படுவீர்கள்.சாதாரண சமையல் பாத்திரங்களை விட இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் பொழுது அதன் சுவை அதிகமாக இருக்கும்.
இரும்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதினால் உடலுக்கு கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்:
1.இரும்பு பாத்திரங்களில் சமைத்து உண்பதினால் உடலில் இரும்புச் சத்து குறைபாடு சரியாகும்.அதோடு உடலில் ஹீமோகுளோபின் எ;அளவும் சமநிலையில் இருக்கும்.
2.சாதாரண சமையல் பாத்திரங்களை காட்டிலும் இரும்பு பாத்திரங்களில் சமைத்து உண்ணும்பொழுது உணவின் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
3.இரும்பு பாத்திரங்கள் சிறந்த வெப்ப கடத்துத் திறனைக் பெற்றுள்ளதால் அவை விரைவில் வெப்பத்தை உறிஞ்சி அவற்றை தக்கவைத்து உணவு ஒழுங்காகவும்,சீராகவும் சமைக்கப்படுவதை உறுதி செய்ய பெரிதும் பயன்படுகிறது.
4.இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்பதினால் நம் உடலுக்கும் மூளைக்கும் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
5.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் உடல் சோர்வு ஏற்படும்.இதனால் மனநலம் சார்ந்த பாதிப்புகள் உருக தொடங்கும்.எனவே ஹீமோகுளோபின்அளவை அதிகரிக்க
இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்பது நல்லது.
6.நீரிழிவு நோய் பாதிப்பு, வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனை,முடி உதிர்வு பாதிப்பு,
கருத்தரிப்பு சிகிச்சை செய்தவர்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை உயர்த்த இரும்பு பாத்திரத்தில் சமைத்து உண்ணுங்கள்.