Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்

நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.பொதுவாகவே பெண் என்பவள் மற்றவர்களை கவனித்துக்கொண்டு தன் உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் எப்பொழுதுமே கண்டுகொள்வதில்லை.
அதிலும் முக்கியமாக இந்த 5 பழக்கங்களை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.அதைப்பற்றி என்ன என்பதனை பார்ப்போம்.

பெண்கள் பின்பற்றாத 5 பழக்கங்கள்?

1.வேலைச்சுமையால் எப்பொழுதும் வேலையையே நினைத்துக்கொண்டு இருப்பதாலும் அவர்கள் நீர் அருந்துவதை மறந்து விடுகின்றனர்.ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகக் குறைவான நீரை அருந்துகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.தாகத்தின் போது நம் உடலுக்கு ஏற்ப போதுமான நீரை அவ்வப்போது குடித்து விடவேண்டும்.

2.பெண்கள் பற்றாக்குறையான உணவை உண்பது.
அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகட்டும் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகட்டும் காலை உணவு என்பதனை நேரத்திற்கு பெண்கள் அதிகம் எடுத்துக்கொள்வது இல்லை.இதனால் அவர்கள் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.முடிந்த அளவு காலை உணவை நேரத்திற்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

3.நேரமின்மையால் உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி பெண்கள் செய்வது இல்லை.வீட்டு வேலை செய்வதே உடற்பயிற்சி தானே என்றும் கேட்கும் பெண்களுக்கு, அது உடற்பயிற்சி அல்ல.வீட்டு வேலையினால் உங்க கலோரிகள் எரிக்கப்படுவது இல்லை.எனவே பெண்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது.இது உங்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகிறது.

4. பெண்கள் நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவது வழக்கமாக இருக்கும்.அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நொறுக்கு தீனியை வாயில் போட்டு மென்று கொண்டே இருப்பர்.இதனால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

5.பெண்களைப் பொறுத்தமட்டில் ஒரே மாதிரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வர். நியூட்ரிஷன் சார்ந்த பழவகைகளை அவர்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்வது இல்லை.ஆனால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பழங்களை அதிகம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில் மாதவிடாயின் போது உதிரப்போக்கு ஏற்பட்டு மிகவும் வலிமை இழந்து போகாமல் இருக்க நீங்கள் உண்ணும் பழ வகைகள் உங்களை பேணிக்காக்கும்.

பெண்களே நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும்.எனவே உங்கள் வாழ்வில் இந்த அறிந்து பழக்கங்களை கட்டாயமாக்க முயற்சி செய்யுங்கள்.

Exit mobile version