தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கையை வைத்த ஆசிரியர்கள் சங்கம்!

0
119

மாணவர்களுடைய மனநிலையை கருத்தில்கொண்டு சனிக்கிழமை தோறும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழக ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வரும் பி.கே. இளமாறன் தெரிவித்திருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததற்கு தமிழக ஆசிரியர்கள் சங்கம் சார்பாக பாராட்டுகின்றோம். கொரோனா சமயத்தில் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வந்தது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்த வைரஸ் கட்டுக்குள் வரும் சமயத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நேரடியான வகுப்பு எடுத்தால் மட்டுமே மாணவர்களை தேர்விற்கு முழுமையாக தயார்ப்படுத்த முடியும் என்பதை தமிழக ஆசிரியர்கள் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தியதன் அடிப்படையில், 10, 9, 11, 12,ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக ஆசிரியர்கள் சங்கம் சார்பாக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதே சமயத்தில் தொடர்ச்சியாக ஒன்பது மாதங்களாக வீட்டில் இருந்த மாணவர்கள் தற்சமயம் பள்ளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனாலும்கூட சனிக்கிழமைகளில் அவர்களுடைய வருகை குறைவாகவே இருக்கிறது. இதற்கு முன்பெல்லாம் பள்ளிகள் நடக்கும் சமயத்தில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சிறப்பு வகுப்புகள் 100% மாணவர்களுடன் நடைபெற்றது.

இருந்தாலும் தற்சமயம் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்களின் வருகை மிகக் குறைவாக தான் இருக்கிறது. காரணம் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைக்குப் பின்னர் தொடர்ச்சியாக ஆறு தினங்கள் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது அவர்களின் விளையாட்டு போன்ற சுதந்திரம் பறிக்கப்படுவதாக நினைத்து மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் திறன் சிதறுக்கின்றது. எனவே பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகை தர வைக்கும் விதமாக வாரத்தில் ஐந்து தினங்கள் மட்டுமே பள்ளிகளில் வேலைநாட்கள் இயங்குவதற்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.