Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!!

#image_title

பாலுக்கு இணையான கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கும் 5 உணவுகள்!!

நம் உடல் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள இந்த கால்சியம் பெரிதும் உதவுகிறது. இந்த கால்சியம் பாலில் தான் அதிகளவு இருக்கிறது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பாலுக்கு இணையான ஏன் பாலை விட அதிக கால்சியம் சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்கள் சில இருக்கிறது. அந்த உணவு பொருட்கள் என்ன என்பது குறித்த விவரம் இதோ.

1.டோஃபு

சைவ உணவு உண்பவராக இருந்தால் டோஃபு உங்களுக்கு கால்சியம் சத்துகளை வழங்குகிறது. இந்த டோஃபுவில் இருந்து சோயா பால் மற்றும் பல சோயா பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவை நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை வழங்க கூடிய ஒன்றாக இருக்கிறது.

2.மத்தி மீன்

நீங்கள் அசைவ உணவு விரும்பி உண்பவராக இருந்தால் மத்தி மீன் உங்களுக்கு அதிக கால்சியம் சத்துகளை வழங்குகிறது. 100 கிராம் மத்தி மீனில் 325 கிராம் கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

3.உலர் பழங்கள்

பாதம், ஆளி விதை உள்ளிட்ட உலர் வகை பொருட்கள் அதிக கால்சியம் சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது. இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தினமும் காலையில் ஊறவைத்த பாதம் பருப்பு மற்றும் ஆளிவிதைகளை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் அவை நம் உடலுக்கு தேவையான சத்துக்களை வாரி வழங்கும்.

4.ப்ரோக்கோலி

காய்கறிகளில் அதிக கால்சியம் சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் காய்கறி ப்ரோக்கோலி ஆகும். வாரத்திற்கு 2 முறை உணவில் சேர்த்து வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்கள் கிடைத்து விடும்.

5.எள்

இதில் வெள்ளை எள், கருப்பு எள் என்று இரு வகைகள் இருக்கிறது. இரண்டிலும் அதிக கால்சியம் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. தினமும் 1 அல்லது 2 ஸ்பூன் எள்ளை தண்ணீரில் ஊறவைத்தோ அல்லது உணவில் சேர்த்தோ உண்டு வந்தோம் என்றால் நம் உடல் எலும்பு வளர்ச்சி மேம்படும்.

Exit mobile version