அக்குளுக்கு அடியில் இருக்கும் பருக்களை உடனடியாக போக்க உதவும் 5 பயனுள்ள டிப்ஸ்!!

0
176
5 Helpful Tips to Get Rid of Underarm Pimples Instantly!!

அக்குளுக்கு அடியில் இருக்கும் பருக்களை உடனடியாக போக்க உதவும் 5 பயனுள்ள டிப்ஸ்!!

உடல் ததுர்நாற்றம் வீசக் முக்கிய காரணம் அக்குளில் அதிகப்படியான பாக்டீரியா தொற்றுகள்.இந்த அக்குள் பகுதியில் இருந்து வெளியேறும் அதிகப்படியான வியர்வையால் அவ்விடத்தில் சிறு சிறு பருக்கள் தோன்றி கைகளை அசைக்க முடியாத நிலை ஏற்படும்.அதேபோல் அக்குள் பகுதியில் அதிகளவு முடி இருந்தாலும் பருக்கள் உருவாகும்.

பொதுவாக கோடை காலத்தில் தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.ஆனால் கோடை மட்டுமல்ல எந்த காலமாக இருந்தாலும் அக்குள் பகுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.இந்நிலையில் பல தொந்தரவுகளை தருகின்ற அக்குள் கொப்பளங்களை அகற்ற இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றவும்.

1)எலுமிச்சை சாறு
2)தேன்

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் சேர்த்து மிக்ஸ் செய்து அக்குள் பகுதியில் அப்ளை செய்து வந்தால் பருக்கள் முழுமையாக நீங்கும்.

1)தேயிலை மர எண்ணெய்

அக்குள் பருக்கள் காய்ந்து உதிர அப்பகுதியில் தேயிலை மர எண்ணையை அப்ளை செய்து வர வேண்டும்.

1)தேங்காய் எண்ணெய்
2)மஞ்சள் தூள்

ஒரு தேக்கரண்டி வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து குழைத்து அக்குள் பகுதியில் அப்ளை செய்தால் பருக்கள் மறையும்.

1)சோடா உப்பு
2)தேங்காய் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் சிறிது சோடா உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து அக்குள் பருக்களில் தடவி வந்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

1)வேப்பிலை
2)மஞ்சள் தூள்

ஒரு கொத்து வேப்பிலையை பேஸ்டாக அரைத்து சிறிது மஞ்சள் கலந்து பருக்கள் மீது தடவி வந்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.