மின்சார வாரியம் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்!! இனி இதெல்லாம் ஈஸியாக முடியும்!!
தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களுக்கு முக்கியமான 5 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவது, மழைகாலம் பாதிப்புகளை தடுப்பது போன்ற காரியங்கள் மிகவும் எளிமையாக இருக்கின்றது.
மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மின் விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த பாதிப்புகளை தடுக்கவும் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் விதமாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியர்கள் தினமும் முன் ஏற்பாடுகளையும் பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினமும் பல மாற்றங்கள் அதிரடியாக செய்யப்பட்டு வருகின்றது. அதே போல தமிழ்நாடு மின்சார வாரியம் தினம் தினம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியம் ஐந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.
முதல் அறிவிப்பு:
மின் கட்டணத்தை இனிமேல் கியூஆர் கோடு முலமாக கட்டலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. பதிவு செய்யப்பட்ட எண்ணைக் கொண்டு டேன்ஜெட்கோ(Tangedco) பக்கத்தில் லாகின் செய்து அங்குள்ள கியூஆர் கோடு மூலமாக ஸ்கேன் செய்து மின் கட்டணத்தை செலுத்தலாம். அதேபோல மின்சார வாரிய அலுவலகங்களில் இந்த கியூஆர் கோடு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்தும் மின் கட்டணத்தை செலுத்தலாம்.
இரண்டாம் அறிவிப்பு:
களத்தில் இறங்கி வேலை செய்யும் மின்சார ஊழியர்களுக்காக பிரத்யேகமான மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மின். கட்டணம் செலுத்தாத வீடுகள் எத்தனை, மின்கட்டணம் செலுத்திய இணைப்புகள் எத்தனை என்பது குறித்த விவரங்களும் இன்னும் பல விவரங்கள் பற்றியும் இந்த மொபைல் செயலி மூலமாக அறிந்து கொள்ளலாம்.
மூன்றாம் அறிவிப்பு:
அனைத்து வீடுகளிலும் ஆர்.சி.டி(RCD) எனப்படும் பாதுகாப்பு கருவியை பொருத்த வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்சிடி என்று அழைக்கப்படும் எஞ்சிய மின் சாதனம் எதற்கு பயன்படுகின்றது என்றால் நம்முடைய வீட்டில் இருக்கும் மின்சாரத்தில் எதாவது தவறு இருந்தால் மின்சாரத்தை தானாகவே அனைத்து விடும். எனவே அனைவருடைய வீடுகளிலும் இந்த ஆர்சிடி இணைப்பை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
நான்காம் அறிவிப்பு:
மின் கட்டணத்தை இனிமேல் வாட்ஸ்ஆப் மூலமாகவும் செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதாவது 500 யூனிட்டுகளுக்கு மேல் மின் கட்டணம் செலுத்தவுள்ள நுகர்வோர்கள் வாட்ஸ்ஆப்பில் கியூஆர் கோடு மூலமாக செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் மூலமாக வாட்ஸ்ஆப்பில் டேன்ஜெட்கோ(Tangedco)வின் பச்சை குறியீடு உள்ள வெரிபை செய்யப்பட்ட பக்கம் மூலமாகவும் அல்லது 9498794987 என்ற எண் மூலமாகவும் மின் கட்டணம் செலுத்தலாம்.
ஐந்தாம் அறிவிப்பு:
தற்பொழுது மின்சார வாரியம் புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 14 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் அதே போல 8 அலகுகள் கொண்ட கட்டிடங்களுக்கும், 14 மீட்டர் உயரத்திற்கு மிகாமல் 300 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் இருக்கும் வணிக கட்டிடங்களுக்கும், 750 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடுகளுக்கும், அனைத்து வகையான தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு பெறுவதற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறத் தேவையில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.